For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அகமதாபாத் விமான விபத்து : கருப்புப் பெட்டியை அமெரிக்காவிற்கு அனுப்ப முடிவு!

02:03 PM Jun 20, 2025 IST | Murugesan M
அகமதாபாத் விமான விபத்து   கருப்புப் பெட்டியை அமெரிக்காவிற்கு அனுப்ப முடிவு

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியை அமெரிக்கா அனுப்ப இந்திய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 12-ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 241 பேரும், நிகழ்விடத்தில் இருந்த 29 பேரும் பலியாகினர்.

Advertisement

உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்துக் கூடுதல் விசாரணை நடத்துவதற்காக, சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியை அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு போக்குவரத்து வாரியத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெட்டிக்கு வெளிப்புறத்தில் ஏற்பட்ட சேதத்தால் டிஜிட்டல் ரெக்கார்டிங் தரவை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என இந்திய நிபுணர்கள் தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement