அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,96,000 கோடி- மத்திய நிதியமைச்சகம் தகவல்!
11:06 AM Nov 02, 2025 IST | Ramamoorthy S
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 89 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த ஜிஎஸ்டி வசூல், அக்டோபர் மாதத்தில் 4.6 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 936 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisement
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 9 சதவீதம் அதிகம் எனவும் கடந்த 10 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement