அஜித் கொலையில் ஐஏஎஸ் அதிகாரியின் தொடர்பை மூடி மறைக்கிறது திமுக அரசு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் குற்றச்சாட்டு!
09:17 AM Jul 04, 2025 IST | Ramamoorthy S
அஜித் குமாரின் கொலையில் ஐஏஎஸ் அதிகாரியின் தொடர்பு உள்ளது என தெரிவித்தும், அந்த ஐஏஎஸ் அதிகாரி யார் என்பதை அரசு மூடி மறைப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் லாக்-அப் டெத், எண்கவுண்ட்டர், போன்ற மிருக செயல்கள் நடைபெறுவதாக தெரிவித்தார்.
Advertisement
ஐஏஎஸ் அதிகாரியின் தொடர்பு உள்ளது என தெரிவித்தும் அரசு மூடி மறைப்பதாகவும், திமுக ஆட்சியில் 24 கொலைகள் நடந்துள்ளதாகவும் கூறினார்.
நீதிமன்றம் தலையிட்ட பிறகே வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், என்ன செய்தாலும் காப்பாற்றப்படுகின்ற தைரியத்தில் காவல்துறை செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement