அஜித்தின் விடா முயற்சி - சிறப்பு காட்சிக்கு அனுமதி!
நடிகர் அஜித் நடிப்பில் நாளை வெளியாகும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' நாளை ரிலீசாகிறிது.
இதில் ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை வெளியாகிறது. இந்நிலையில் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று நாளை ஒரு நாள் மட்டும் ஒரு கூடுதல் காட்சி திரையிட்டு கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காலை 9 மணி முதல் இரவு 2 மணிக்குள் 5 காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.