அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்? - வார இறுதியில் விடை!
12:26 PM Jun 05, 2025 IST | Murugesan M
அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் 007 ஆக நடிக்கப்போவது யார் என்பதை, அப்படங்களுக்கான அதிகாரப்பூர்வ உரிமையைப் பெற்ற அமேசான் எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் தேர்வு செய்துள்ளது.
இந்த வார இறுதியில் புதிய ஜேம்ஸ் பாண்ட் யார் என்பதை அந்நிறுவனம் அறிவிக்க உள்ளது. சீன் கானரி, ரோஜர் மூர் உள்ளிட்டோர் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்துப் புகழ் பெற்றனர்.
Advertisement
கடைசியாக வெளியான 5 படங்களில் டேனியல் கிரேக், ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தார். கடைசியாக 2021இல் 'நோ டைம் டூ டை' என்ற ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியானது.
அதன் பிறகு ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement