For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அதிகரிக்கும் பதின்ம வயது கர்ப்பம்: காரணம் என்ன?

08:05 PM Feb 04, 2025 IST | Murugesan M
அதிகரிக்கும் பதின்ம வயது  கர்ப்பம்  காரணம் என்ன

கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் 19 வயது நிரம்பாத பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்துள்ளது. பதின்ம வயது பெண்கள் கர்ப்பமடைய என்ன காரணம் என்பது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டுல 15-ல இருந்து 19 வயதுக்குட்ப்பட்ட இளம்பெண்கள்ள கர்ப்பிணியா இருக்க இளம் பெண்களோட எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது சுமார் 20 சதவீதம் அதிகரிச்சுயிருக்குறதா தகவல் வெளியாகியிருக்கு... தமிழகத்துல கர்ப்பிணிகளின் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட 7 சதவீதம் குறைஞ்சு இளம் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிச்சுயிருக்கு.

Advertisement

குறிப்பா இந்தியாவுல 15-ல இருந்து 19 வயதுக்குட்பட்ட பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிகழ்வுகள் நகரங்களைவிட கிராமங்கள்ள அதிகம் நடைபெறுவதா மத்திய அரசின் தரவுகள்ள தெரிவிக்கப்பட்ருக்கு...

தமிழகத்தில டீன் ஏஜ் கர்ப்பிணிகள் அதிகரிக்க என்ன காரணம் ? தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்துல டீன் ஏஜ் கர்ப்பிணிகள் அதிகம் ? இதையெல்லாம்தான் இந்த தொகுப்புல நாம பார்க்கபோறோம்.

Advertisement

2019 - 20 காலகட்டத்துல தமிழகத்துல சுமார் 10. 2 லட்சம் பெண்கள் குழந்தைகள பெற்றுக்கொண்ட நிலையில ... அந்த எண்ணிக்கை 2023 - 24-ல 9.5 லட்சமா சரிவை சந்திச்சுயிருக்கு.

13ல இருந்து 19 வயதுடைய பெண்கள்ள 11772 பேர் 2019 - 20 காலகட்டத்துல குழந்தைகள பெற்றுள்ள நிலையில அதுவே 2023 - 24 காலகட்டத்துல அந்த எண்ணிக்கை 14360-ஆ அதிகரிச்சுயிருக்கு.

தமிழ்நாட்டுல 2023 - 24 ஆண்டுல குழந்தைகள பெற்றுக்கொண்ட மொத்த பெண்களின் எண்ணிக்கைள 1.5 சதவீதம் பெண்கள் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது... இதுவே 2019- 20 காலக்கட்டத்துல இதுவே 1.1 சதவீதமா குறைஞ்சியிருந்தது... கிட்டதட்ட 0.4 சதவீதம் கடந்த ஐந்து வருடங்கள்ள அதிகரிச்சுயிருக்குனு தேசிய குடும்ப நலன் ஆய்வறிக்கையில தெரிவிச்சியிருக்காங்க.

நாகப்பட்டினம் , தேனி, பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் இளம் கர்ப்பிணிகள அதிகம் கொண்ட
மாவட்டங்களா பார்க்கப்படுகிறது. அதுவே காஞ்சிபுரம், சிவகங்கை , விருதுநகர் , நாகர்கோவில் மற்றும் சென்னையில பார்த்தோம்னா இளம் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை சற்று குறைவுனுதான் சொல்லனும்.

இதுவே இந்தியா அளவுல பார்த்தோம்னா மேற்கு வங்கம் , அசாம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள்ள டீன் ஏஜ் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகமா இருக்குறதா தேசிய குடும்ப நல ஆய்வுல தெரியவந்துருக்கு...

சரி... இந்தியாவுல குறிப்பா தமிழ்நாட்டுல பதின்ம வயது கர்ப்பிணிகள் அதிகரிக்க என்ன காரணம்றத தற்போது பார்க்கலாம்.

1. ஆரம்பகால திருமணம் அல்லது காதல் திருமணம்

2. சமூகம் மற்றும் சமூக அழுத்தம்

3. பாலியம் துஷ்பிரயோகம்

4. கொரோனா ஊரடங்கால் ஏற்ப்பட்ட வறுமை , குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி

5. விழிப்புணர்வு இல்லாதது

இளம் வயதிலேயே குழந்தைகளை பெற்றுக்கொள்வதால் பெண்களின் உடலில் பல பிரச்சனைகள் ஏற்ப்படுகின்றன

1. இளம் வயதில் கருப்பை முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது...

2. குறைப்பிரசவத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகம்

3. பனிக்குடத்தில் போதுமான அளவு நீர் இருக்காது.. இதனால் கருப்பை சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடுகிறது...

4. குழந்தை பிறந்த பிறகு அதிக ரத்தபோக்கு ஏற்படலாம்

5. நஞ்சுக்கொடி வெளியே வரமுடியாமல் தாய் உயிரிழக்க நேரிடும்...

இளம் கர்ப்பிணிகள் அதிகரிப்பதை தடுக்கும் விதமா அரசாங்கம் பள்ளி மற்றும் கல்லூரிகள்ள விழிப்புணர்வுகளை ஏற்ப்படுத்தவேண்டியது அவசியம்... அதேசமயம் பெண்களுக்கான அதிகார்வபூர்வ திருமண வயதை இந்தியாவுல அதிகரிச்சால் மட்டுமே டீன் ஏஜ் கர்ப்பிணிகளின் எண்ணிகையை குறைக்கமுடியும்.

Advertisement
Tags :
Advertisement