For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அதிமுக - பாஜக கூட்டணியைக் கண்டு திமுக எதற்காக அஞ்சுகிறது? - எடப்பாடி பழனிசாமி கேள்வி!

11:32 AM Apr 16, 2025 IST | Murugesan M
அதிமுக   பாஜக கூட்டணியைக் கண்டு திமுக எதற்காக அஞ்சுகிறது    எடப்பாடி பழனிசாமி கேள்வி

மக்களைத் திசை திருப்ப மாநில சுயாட்சி என்ற நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாகச் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில்

Advertisement

மக்களைத் திசைதிருப்ப மாநில சுயாட்சி என்று திமுக அரசு நாடகமாடுகிறது என்றும் மத்தியில் ஆட்சி அதிகாரத்திலிருந்தபோது திமுக மாநில சுயாட்சியை வலியுறுத்தாதது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இண்டி கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் கூட மாநில சுயாட்சி இல்லை என்றும் அதிமுக, பாஜக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும் என்றும் அதிமுக - பாஜக கூட்டணியைக் கண்டு திமுக எதற்காக அஞ்சுகிறது? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

அதிமுக, பாஜக கூட்டணியை விமர்சிக்க திமுகவுக்குத் தகுதி இல்லை என  எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Advertisement
Tags :
Advertisement