அமெரிக்காவின் டெக்சாஸில் கொட்டி தீர்த்த மழை - வெள்ளத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
11:29 AM Jul 06, 2025 IST | Ramamoorthy S
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
டெக்சாஸ் மாகாணத்தின் மத்திய கெர்கவுன்டி பகுதியில் பலமணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, ஆற்றின் அருகே கோடை விடுமுறை முகாமில் பங்கேற்றிருந்த 25 சிறுமிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Advertisement
இதேபோல், டெக்சாஸ் மாகாணத்தில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழுந்து தவித்து வருகின்றனர் கனமழை வெள்ளத்தில் சிக்கி 15 குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement