அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை - ஈரான்
04:53 PM Jun 27, 2025 IST | Murugesan M
அணு ஆயுதங்கள் பற்றி அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கூற்றை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மறுத்துள்ளார்.
Advertisement
அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது தங்கள் நலன்களுக்கு உதவுமா என்பதை ஈரான் இன்னும் ஆராய்ந்து வருவதாகவும் அவர்க் கூறியுள்ளார்.
மேலும், ஈரானின் அணுசக்தி திட்டம் முழுக்க முழுக்கச் சிவில் நோக்கங்களுக்காகவே என்றும் அரக்ச்சி மீண்டும் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement