அமெரிக்கா : இஸ்ரேல் ஆதரவு பேரணியில் பெட்ரோல் குண்டு வீச்சு - 8 பேர் படுகாயம்!
01:42 PM Jun 04, 2025 IST | Murugesan M
அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
பாலஸ்தீனத்திற்குச் சுதந்திரம் வேண்டும் எனக் கோஷமிட்டுக் கொண்டே பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைராலாகியுள்ளது.
Advertisement
Advertisement