அமெரிக்கா - சீனா உடனான வர்த்தக போர் தீவிரம்!
04:35 PM Jun 07, 2025 IST | Murugesan M
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் சீனா உடனான வர்த்தக போர் தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க - சீன அதிகாரிகள் லண்டனில் அடுத்த வாரம் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement
இதில், அமெரிக்கத் தரப்பில் கருவூல அமைச்சர் ஸ்காட் பெஸ்சென்ட், வர்த்தக அமைச்சர் ஹோவர்டு லுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமீசன் கிரீர் உள்ளிட்ட அதிகாரிகள், சீன தலைவர்களுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இந்த சந்திப்பு நன்றாக நடைபெற வேண்டும் என தன்னுடைய சமூக ஊடக பதிவில் டிரம்ப் பகிர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement