அமெரிக்கா : தப்பிச் சென்ற வரிக்குதிரை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
03:23 PM Jun 09, 2025 IST | Murugesan M
அமெரிக்காவின் டென்னசியில் உரிமையாளரிடமிருந்து தப்பிய செல்லப்பிராணியான எட் என்ற வரிக்குதிரை பிடிபட்டது.
டென்னசியில் உரிமையாளரிடமிருந்து தப்பிய எட் என்ற வரிக்குதிரை 1 வாரமாகச் சாலைகளில் சுற்றித்திரிந்தது. அதனைப் பிடிக்க முயன்ற வனத்துறையினருக்குத் தொடர்ந்து போக்கு காட்டி வந்தது.
Advertisement
இந்நிலையில் அந்த வரிக்குதிரையை ஒருவழியாகப் பிடித்த வனத்துறையினர், ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement