For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அமெரிக்க ஐபிஎம் நிறுவனத்தில் 9000 ஊழியர்கள் பணி நீக்கம்?

07:54 AM Mar 26, 2025 IST | Ramamoorthy S
அமெரிக்க ஐபிஎம் நிறுவனத்தில் 9000 ஊழியர்கள் பணி நீக்கம்

அமெரிக்காவில் ஐபிஎம் நிறுவனம் 9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டுவரும் உலகின் முன்னணி நிறுவனமான ஐ.பி.எம்., நிறுவனத்தில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.  பல்வேறு மென்பொருள் மற்றும் கணினி சார்ந்த நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில், ஐ.பி.எம்., நிறுவனமும் அமெரிக்காவில் 9 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கலிஃபோர்னியா, டெக்சாஸ், டல்லாஸ், நியூயார்க் நகரங்களில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றியோர் நீக்கபட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement