For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அரசு கேபிளில் இருந்து புதிய  தலைமுறை டிவி முடக்கம் - அண்ணாமலை கண்டனம்!

11:14 AM Oct 05, 2025 IST | Ramamoorthy S
அரசு கேபிளில் இருந்து புதிய  தலைமுறை டிவி முடக்கம்   அண்ணாமலை கண்டனம்

அரசு கேபிளில் இருந்து புதிய  தலைமுறை டிவி முடக்கப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்த துயர நிகழ்வில், திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டிய புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியை, அரசு கேபிளில் இருந்து தமிழகம் முழுவதும் முடக்கியிருக்கிறது திமுக அரசு என தெரிவித்துள்ளார்.

Advertisement

ஊடகங்கள் திமுக அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்  அதற்குத்தான், பொதுமக்கள் யாருமே பார்க்காத குடும்பத் தொலைக்காட்சிகளை வைத்திருக்கிறீர்களே? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் பிரச்சினைகளை, கேள்விகளை வெளிக்கொள்ளும் ஊடகங்களை ஏன் முடக்குகிறீர்கள்? தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முதலமைச்சர் சொந்தத் தொகுதியிலேயே, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போகின்றன. அரசுத் துறைகள் அனைத்தும் செயலிழந்து நிற்கின்றன. இப்படி ஒரு இருண்ட சூழலில் தமிழகத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, ஊடகங்களை முடக்கிவிட்டால் மக்களுக்கு எதுவும் தெரியாது என்ற முட்டாள்தனமான ஐடியா எல்லாம் உங்களுக்கு யார் கொடுக்கிறார்கள் முதலமைச்சர்  ஸ்டாலின் அவர்களே?  என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement
Tags :
Advertisement