அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!
10:05 AM Jul 05, 2025 IST | Ramamoorthy S
அர்ஜென்டினா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கானா, டிரினிடாட்- அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு அரசுமுறை பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளார். டிரினிடாட் அண்டு டொபாகோ பயணத்தை முடித்துக் கொண்டு அர்ஜென்டினா புறப்பட்டு சென்ற பிரதமர் மோடிக்கு, தலைநகர் பியூனஸ் அயர்ஸ் விமான நிலையத்தில் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement
பியூனஸ் அயர்ஸில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் பூங்கொத்து கொடுத்தும் பாரம்பரிய நடனமாடியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கிருந்த சிறுமியை தூக்கி, பிரதமர் மோடி கொஞ்சி மகிழ்ந்தார்.
Advertisement
Advertisement