அர்மேனியா : பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து - 17 மாணவர்கள் காயம்!
01:34 PM Nov 03, 2025 IST | Murugesan M
வடக்கு அர்மேனியாவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்தனர்.
யெரெவன் மாகாணா மொழிகள் மற்றும் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
Advertisement
யெரெவனில் இருந்து சுமார் 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டிலிஜன் நகரில் உள்ள ஹாகார்ட்சின் மடாலயம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 17 மாணவர்கள் காயமடைந்த நிலையில் அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Advertisement
Advertisement