ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி - மேலும் 2 பதக்கங்களை வென்று, இந்திய வீரர்கள் அசத்தல்!
10:18 AM May 29, 2025 IST | Ramamoorthy S
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், மேலும் 2 பதக்கங்களை வென்று, இந்திய வீரர்கள் அசத்தி உள்ளனர்.
தென் கொரியாவின் குமி நகரில் நடைபெறும் 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், கலப்பு தொடர் ஓட்ட பந்தயத்தில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. பந்தய தூரத்தை 3 புள்ளி 18 நிமிடங்களில் கடந்து இந்திய அணி வீரர்கள் சந்தோஷ்குமார் தமிழரசன், விஷால், ரூபால், சுபா வெங்கடேசன் ஆகியோர் தங்கத்தை தட்டிச் சென்றனர்.
Advertisement
இதேபோல், மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரவின் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 16 புள்ளி 09 மீட்டர் தூரம் தாண்டி பிரவின் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
Advertisement
Advertisement