ஆந்திராவில் கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் கைது!
01:49 PM Apr 16, 2025 IST | Murugesan M
ஆந்திராவில் கர்ப்பிணி மனைவியைக் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
விசாகப்பட்டினம் நகரில் உள்ள மதுரவாடா பகுதியைச் சேர்ந்த ஞானேஸ்வர் ராவ் - அனுஷா தம்பதியர் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர்.
Advertisement
அண்மையில் கர்பமான அனுஷாவின் நடத்தையில் ஞானேஸ்வருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கர்ப்பிணி மனைவியான அனுஷாவை ஞானேஸ்வர் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
Advertisement
இது தொடர்பாகப் பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஞானேஸ்வரை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement