ஆந்திரா : கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு!
05:22 PM Nov 03, 2025 IST | Murugesan M
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே குளிப்பதற்காகக் கடலுக்கு சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லூரில் உள்ள கொத்தமிட்டாவைச் சேர்ந்த ஹிமாயன், தாஜின், அடில் ஆகியோர் 12ம் வகுப்பு படித்து வந்தனர்.
Advertisement
நேற்று வார விடுமுறை என்பதால் மூவரும் மெய்ப்பாடு கடற்கரைக்குச் சென்றனர். அப்போது மூவரும் கடலில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தபோது அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதனால் மூச்சுதிணறல் ஏற்பட்டு மூவரும் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து மூவரின் உடல்களையும் கடலோரக் காவல் படையினர் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்துகின்றனர்.
Advertisement
Advertisement