ஆனைமலை சந்தையில் காய்கறி விற்பனை செய்த மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டும் திமுக நிர்வாகி!
11:56 AM Jun 11, 2025 IST | Ramamoorthy S
ஆனைமலை சந்தையில் காய்கறி விற்பனை செய்த மூதாட்டியிடம் திமுக பிரமுகர் பணம் கேட்டு அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதி சந்தையை ஆனைமலை பேரூராட்சி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட மூவர் குத்தகைக்கு எடுத்துள்ளனர்.
Advertisement
இதனால், அங்கு கடை வைத்துள்ள அனைவரிடமும் சந்தோஷ்குமார் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த 90 வயது மூதாட்டியிடம் அவர் பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
மூதாட்டியை தரம் தாழ்ந்து பேசியதுடன், விற்பனைக்காக வைத்திருந்த காய்கறிகளை தூக்கி எறிந்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில, திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement