ஆபரேஷன் சிந்தூர் வெற்றி - சென்னையில் இன்று தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்தும் சொல்லரங்கம் நிகழ்ச்சி!
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி தொடர்பாக சென்னையில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்தும் சொல்லரங்கம் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, இந்திய ராணுவம் 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டு வெற்றி கண்டது.
இதனால் அச்சமடைந்த பாகிஸ்தான் அரசு இரு நாடுகளுக்கிடையே சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள இந்தியாவிடம் பணிந்து கேட்டுக்கொண்டது. இந்நிலையில், 'ஆப்ரேஷன் சிந்தூர்' மூலம் உலகிற்கு இந்தியா சொன்ன செய்தி ராணுவ வெற்றியா? ராஜதந்திர வெற்றியா?’ என்ற தலைப்பில், சொல்லரங்கம் நிகழ்ச்சியானது தமிழ் ஜனம் தொலைக்காட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்திலுள்ள டிஜி வைஷ்ணவா கல்லூரி அரங்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள சொல்லரங்கம் நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளான மேஜர் இந்திரபாலன், மேஜர் மதன், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான கேப்டன் நக்கீரன் பரணன், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியான கமாண்டர் ராகுல் சீத்தாராமன், புவிசார் அரசியல் மற்றும் வியூகவியல் நிபுணர்களான முனைவர் சேஷாத்ரி சாரி மற்றும் பிரியதர்ஷினி ராகுல் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்க அனுமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.