For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆழ்ந்த தூக்கமே அற்புதம் நிகழ்த்தும் - சிறப்பு தொகுப்பு!

09:00 PM Mar 14, 2025 IST | Ramamoorthy S
ஆழ்ந்த தூக்கமே அற்புதம் நிகழ்த்தும்   சிறப்பு தொகுப்பு

"உலகத் தூக்க தினம்" இன்று கடைபிடிக்கப்படுகிறது.... மனிதனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம், தூக்கத்தில் மாற்றமிருந்தால் என்னென்ன சிக்கல்களை மனித இனம் சந்திக்க வேண்டும் என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

நவீன உலகத்தில் வாழும் மனிதர்கள் இதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான உடல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு மிக முக்கிய அடிப்படை காரணமே முறையான தூக்கமின்மை தான், மனிதர்கள் சீரான தூக்க தூங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே, கடந்த 2008-ஆம் ஆண்டு முதல், மார்ச் 14ஆம் தேதி World Sleep Day அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

பிறந்த குழந்தையாக இருக்கும் பொழுது 10- 11 மணி நேரம் தூங்குவார்கள், அதன்பின் 7 முதல் 8 மணிநேரம் சீரான தூக்கம், 60 வயதை கடந்த பிறகு இந்த தூக்கம் 6 முதல் 5 மணி நேரமாக குறையும்.....

கடந்த 1980ஆம் ஆண்டு வரை கூட, சூரியன் அஸ்தமித்த உடன் மக்கள் உறங்கச் சென்று விடுவார்கள், அவர்களுக்கு தியேட்டர்கள் மட்டுமே ஒரே பொழுதுபோக்கு அதனைத் தாண்டி எந்த பொழுதுபோக்குமில்லை. வேலை, தூக்கம், நண்பர்கள் என வாழ்ந்தார்கள்....

Advertisement

1990-களின் பிற்பகுதியில் தகவல் தொழிநுட்ப வளர்ச்சியால், எல்லா வீட்டுகளுக்கும் தொலைக்காட்சி அத்தியாவசிய பொருளாக மாறியது. அது மக்கள் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆண்ட்ராய்டு செல்போன் வருகை மொத்தமாக மனிதர்களின் தூக்கத்தை தலைகீழாக புரட்டி போட்டு விட்டது. குறிப்பாக ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் ஃபீட், வாட்ஸ் ஆப், ஸ்டேட்ஸ் என பல்வேறு செயலிகள் மனிதனின் தூக்கத்தை இழக்கச் செய்து விட்டன. இது மட்டுமல்லாமல், இரவு நேர பார்ட்டி, அவுடிங், சாப்பாடு சாப்பிடுவது, மதுப்பழக்கம் என வாழ்க்கை முறை மாறிக் கொண்டே வருகிறது.

முறையற்ற தூக்கம் இருந்தால் இருதயக் கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும், அதுமட்டுமல்லாமல் வீட்டில் பிரச்னை, வேலை பார்க்கும் இடத்தில் கோபம் என மனம் சார்ந்த பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு, அதீத மன அழுத்ததிற்கு வித்திடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இப்போது வாழும் 50% பேருக்கு தூக்கம் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டு மனநல சார்ந்த பாதிப்புகள் இருக்கின்றன. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்லது அல்லது மருத்துவரை அணுகி இதற்கு தீர்வு காணலாம்...

மனிதர்களின் செயல்பாடு முற்றிலுமாக இயற்கைக்கு எதிராக இருப்பதால் எதிர்காலத்தில் தூக்கம் சார்ந்த பிரச்னைகளுக்காக ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உதயமாகலாம் என்கிறார் மனநல ஆலோசகர் ராஜசுந்தர பாண்டியன்.

குதிரை, நாய், பறவைகள் சரியான நேரத்தில் தூங்கச் சென்று விடும் ஆனால் மனிதன் அதற்கு எதிராக செயல்படுகிறான். இரவு நேர வேலை செய்பவர்கள், காலையில் முழுமையாக தூங்க வேண்டும் ஆனால் அதனை செய்வதில்லை இது அவர்களது வேலையில் பல்வேறு சிக்கல்களை கொண்டு சேர்க்கும் எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

Advertisement
Tags :
Advertisement