ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் 2025 - நீரஜ் சோப்ரா சாம்பியன்!
01:10 PM Jun 26, 2025 IST | Murugesan M
ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இந்த போட்டியில் முதல் மற்றும் கடைசி முயற்சிகளில் புள்ளிகள் எடுக்காத நீரஜ் சோப்ரா, 3 ஆவது முயற்சியில் 85.29 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். இதன் மூலம் அவர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
Advertisement
மேலும் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்மித் 84.12 மீட்டர் தூரமும், கிரெனடா நாட்டை சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 83.63 மீட்டர் தூரமும் ஈட்டி எறிந்து 2 மற்றும் 3 ஆம் இடங்களைப் பிடித்தனர்.
Advertisement
Advertisement