ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்கா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, லண்டனில் உள்ள லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள், தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
அதன் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களும், ஸ்மித் 66 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணியும் ரன் குவிக்க முடியாமல் திணறிய நிலையில், முதல் இன்னிங்ஸில் அந்த அணி வெறும் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சிறப்பாகப் பந்து வீசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.