For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இத்தனை நாடகங்கள் ஏன்? - அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை கேள்வி!

09:11 AM Mar 13, 2025 IST | Ramamoorthy S
இத்தனை நாடகங்கள் ஏன்    அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை கேள்வி

அமைச்சர் பிடிஆர பழனிவேல் தியாகராஜன் மகன் படித்த ஆங்கிலம்  மற்றும் பிரெஞ்சு மொழி ஆகிய இரு மொழிகள் படித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நேற்று  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்திருக்கும் பதிலைக் கேட்டதாகவும்,  தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார் என்றும், அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், முதல் மொழி: ஆங்கிலம் இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ் என அவர் கூறியுள்ளார்

இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா?  தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்? பிடிஆ[ரின் இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Advertisement