For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இத்தாலி ஓபன் டென்னிஸ் : பவுலினி - எர்ரானி ஜோடி சாம்பியன்!

01:11 PM May 20, 2025 IST | Murugesan M
இத்தாலி ஓபன் டென்னிஸ்   பவுலினி   எர்ரானி ஜோடி சாம்பியன்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி - சாரா எர்ரானி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

ரோமில் நடைபெற்று வரும் இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவுக்கான இறுதிச் சுற்று நடைபெற்றது.

Advertisement

இதில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி - சாரா எர்ரானி ஜோடி, ஜெர்மனியின் எலைன் மெர்டன்ஸ் -  ரஷ்யாவின் வெரோனிகா குடர்மெடோவா ஜோடியுடன் மோதியது.

இதில் சிறப்பாக விளையாடிய பவுலினி - எர்ரானி ஜோடி 6-க்கு 4, 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

Advertisement

ஏற்கனவே பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் ஜாஸ்மின் பவுலினி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
Advertisement