For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்தாண்டு இறுதிக்குள் பறக்கும் கார் அறிமுகம் - எலான் மஸ்க் தகவல்!

11:49 AM Nov 03, 2025 IST | Murugesan M
இந்தாண்டு இறுதிக்குள் பறக்கும் கார் அறிமுகம்   எலான் மஸ்க் தகவல்

இந்தாண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகம் செய்து டெமோ காட்ட உள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.

Advertisement

இதனால் தாமதம் ஏற்படுவதால் பயணமே சலிப்படைய செய்கிறது. ஆகையால் பயணத்தை எளிதாக்கும் வகையில் பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகம் செய்து டெமோ காட்ட உள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Advertisement

அந்த டெமோ நிகழ்ச்சி வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் எனவும் அவர் பேசியுள்ளார். மின்​சா​ரத்​தில் இயங்​கு​வது, அதிநவீன தொழில்​நுட்ப அம்​சங்​கள், மேம்​பட்ட பாது​காப்பு, சுற்றுச்சூழலுக்கு உகந்தது போன்றவை டெஸ்லா கார்களின் சிறப்​பு​களாக அறியப்​படு​ன்றன.

மஸ்கின் பறக்கும் கார் திட்டம் வெற்றியடைந்தால், தனி மனித பயண முறைகளிலேயே பெரும் மாற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது.

Advertisement
Tags :
Advertisement