இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!
ரஷ்யாவின் S 400 மற்றும் உள்நாட்டுத் தயாரிப்பான AKASHTEER ஆகிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வைத்திருக்கும் இந்தியா மற்றுமொரு AIR DEFENCE சிஸ்டத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
மன்னராட்சி காலம் முதல் தற்போது வரை போர் முறைகள் மாறிக்கொண்டே வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தாக்குதலின் வடிவங்களும் வேறுபடுகின்றன. அந்த வகையில் தற்போது DRONE-களைக் கொண்டு தாக்குவதுதான் அதிகம் பின்பற்றப்படும் போர் முறையாக இருக்கிறது. எனவே அனைத்து நாடுகளும் தங்களது வான் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை அதிக உயரத்தில் பறந்து வரும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைத் தடுக்க ரஷ்யாவின் S 400 வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்துகிறது. ஆனால் குறைந்த உயரத்தில் பறந்து வரும் ட்ரோன்களை S 400-ஆல் கண்டறிய முடியாது. அதனால் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட AKASHTEER வான் பாதுகாப்பு அமைப்பையும் இந்தியா பயன்படுத்தி வருகிறது. குறைந்த உயரத்தில் பறந்து வரும் DRONE-களையும் AKASHTEER எளிதாக அழித்துவிடும்.
இப்படி வான் பாதுகாப்பில் UPDATE-ஆக இருக்கும் இந்தியா, ‘KUSHA’ என்ற பெயரில் புதிய AIR DEFENCE சிஸ்டத்தை உருவாக்கி வருகிறது. 350 கிலோ மீட்டர் தொலைவுக்குள் பறந்து வரும் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் DRONE-களை கண்டறிந்து அழிக்கும் சக்தி படைத்தது KUSHA. பிறநாடுகளிடம் இருந்து தளவாடங்களை வாங்குவதைவிடத் தொழில்நுட்பத்திலும் சுதந்திரமாகச் செயல்படவே இந்தியா விரும்புகிறது.
அதன் ஒருபகுதியாக 2022-ஆம் ஆண்டில் KUSHA திட்டத்தை DRDO தொடங்கியது. 150 கிலோ மீட்டர், 250 கிலோ மீட்டர், 350 கிலோ மீட்டர் என மூன்று LAYER-களைக் கொண்டது KUSHA. இந்த தொலைவுக்குள் எதிரி நாட்டு விமானங்களோ, DRONE-களோ வந்தால் KUSHA அழித்துவிடும்.
2028 அல்லது 2029-ஆம் ஆண்டு KUSHA பயன்பாட்டுக்கு வரும் எனக்கூறப்படுகிறது. அதன்பிறகு LONG RANGE வான் பாதுகாப்பு அமைப்பைச் சொந்தமாக உருவாக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துவிடும். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இத்தகைய வான் பாதுகாப்பு அமைப்பை வைத்துள்ளன.
தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடு என்று கூறப்படும் இஸ்ரேல் வைத்துள்ள ‘IRON DOME’ வான் பாதுகாப்பு அமைப்பு 70 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வரும் எதிரி விமானங்களை மட்டுமே தடுக்கும். அதேபோல் அமெரிக்க வைத்திருக்கும் வான் பாதுகாப்பு அமைப்பு 110 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வரும் எதிரி ஏவுகணைகளை மட்டுமே தடுக்கும். ஆனால் இந்தியா உருவாக்கி வரும் KUSHA, 350 கிலோ மீட்டர் தொலைவு வரை எதிரிகளின் தாக்குதலைத் தடுக்கக்கூடியது. இதன்மூலம் வான் பாதுகாப்பில் வல்லரசு நாடுகளை இந்தியா தாண்டிவிடும்.