இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு குறையவில்லை - பியூஷ் கோயல்
04:28 PM Jun 11, 2025 IST | Murugesan M
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு குறைந்து வருவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பியூஸ் கோயல், சுவிட்சர்லாந்தின் பொ்ன் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Advertisement
அப்போது பேசிய அவர், இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு வீழ்ச்சியடையவில்லை என்றும், சர்வதேச பொருளாதார சூழலில் நிலவும் ஏற்ற-இறக்கம் காரணமாக அந்நிய நேரடி முதலீடும் சில நேரங்களில் பாதிக்கப்படும் எனவும் கூறினார்.
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 748.78 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளதாகக் கூறிய அவர், இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement