இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான விசாவை நிறுத்தியது சவுதி!
02:26 PM Jun 10, 2025 IST | Murugesan M
இந்தியா உட்பட 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு, வேலை விசா தவிர, இ-விசா, குடும்ப உறுப்பினருக்கான வருகை விசா, சுற்றுலா விசா உள்ளிட்டவற்றைச் சவுதி அரேபியா நிறுத்தி வைத்துள்ளது.
வங்கதேசம், பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்ட நாடுகளும் இந்தப் பட்டியலில் உள்ளன. கடந்த மாதமே துவங்கிய இந்தக் கட்டுப்பாடு, இம்மாத இறுதி வரை நடைமுறையில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஹஜ் காலம் நடைபெற்று வருவதால், இந்த விசாக்களை பயன்படுத்தி வருவதைத் தடுக்கவே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகச் சவுதி அரேபியா கூறியுள்ளது.
Advertisement
Advertisement