இந்தியா, கானா இடையே சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் - பிரதமர் மோடி
06:42 AM Jul 03, 2025 IST | Ramamoorthy S
கானா அதிபர் மகாமாவின் 'FEED GHANA' திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குவதில் இந்தியா பெரும் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அக்ரா நகரில் கானா அதிபர் ஜான் டிரமானி மகாமாவுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, கானாவிற்கான ITEC மற்றும் ICCR உதவித் தொகைகளை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.
Advertisement
மேலும், இளைஞர்களின் தொழிற்கல்விக்கான திறன் மேம்பாட்டு மையத்தை நிறுவும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும், சுகாதாரம், தேச பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளிடையே ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Advertisement
Advertisement