இந்தியா - பாக். போர் குறித்து டிரம்ப், புதின் விவாதம் - ரஷ்யா!
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த சண்டை குறித்து டிரம்ப் மற்றும் புதின் ஆகியோர் விவாதித்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள கிரெம்ளின் மாளிகை நிர்வாகி யுரே உசாகோவ், டிரம்ப் மற்றும் புதின் இடையிலான பேச்சுவார்த்தையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் போர், இந்தியா-பாகிஸ்தான் இடையே அண்மையில் நிகழ்ந்த போர் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அப்போது, இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் தான் தனிப்பட்ட முறையில் தலையிட்டு பேச்சு நடத்தி சண்டையை முடித்து வைத்ததாக புதினிடம் டிரம்ப் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தரப்பு கேட்டுக் கொண்டதாலேயே போரை நிறுத்தியதாக இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது. இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்காகவே டிரம்ப் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகத் தம்பட்டம் அடிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.