இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பையை கைப்பற்றியது தமிழ்நாடு ஹாக்கி ஆண்கள்!
07:41 AM Jun 28, 2025 IST | Ramamoorthy S
40 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான முதலாவது ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பையை, தமிழ்நாடு ஹாக்கி ஆண்கள் அணி வென்றது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான முதலாவது ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பை 2025 போட்டிகள், சென்னையில் கடந்த 18ம் தேதி முதல் நடைபெற்றது. இந்த போட்டியில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். இவ்வளவு நாள் விறுவிறுப்பாக நடைபெற்ற ஹாக்கி போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.
Advertisement
அதில், ஆண்கள் பிரிவில் மகாராஷ்டிரா அணியை 5 க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. மகளிர் பிரிவில் 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஒடிசா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
Advertisement
Advertisement