இந்திய கடற்படை பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு!
கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபெறும் விழிப்புணர்வு கார் பேரணி சென்னையிலும் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
இந்திய கடற்படையின் பாதுகாப்பு பணிகள் பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரி வரை இந்திய கடற்படையினர் கார் பேரணி நடத்தி வருகின்றனர்.
கடந்த 3-ஆம் தேதி 'நாடிகல் டிரெயில்' என்ற கார் பேரணி தொடங்கிய நிலையில், மேற்கு வங்கம், ஒடிசா வழியாக சென்னை கடற்படை தளமான ஐஎன்எஸ்-க்கு வந்தடைந்தது. இந்த கார் பேரணியை தமிழகம், புதுச்சேரி கடற்படைப் பகுதி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், இந்த பேரணி மூலமாக இந்திய கடற்படை மற்றும் அக்னிபாத் திட்டம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், கடற்படையில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என கூறினார்.