For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்திய வம்சாவளி வேதத்தை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றங்கள் தடைவிதிப்பு!

03:08 PM Nov 04, 2025 IST | Murugesan M
இந்திய வம்சாவளி வேதத்தை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றங்கள் தடைவிதிப்பு

43 ஆண்டுகள் தவறாகச் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.

இந்தியாவில் பிறந்தவரான சுப்பிரமணியம் வேதம், அமெரிக்காவின் பென்சில்வேனியாவிற்கு அவரது பெற்றோரால் 9 மாத குழந்தையாக அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisement

பின்னர் அங்கேயே வளர்ந்த அவர் மீது 1980-களில் போதைப்பொருள் வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் சுப்பிரமணியம் சில காலம் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. பின்னர் 1983-ம் ஆண்டு தனது முன்னாள் அறைத் தோழரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுப்பிரமணியம் வேதத்திற்கு, பென்சில்வேனியா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

Advertisement

கடந்த 2022ம் ஆண்டு வெளியான புதிய ஆவணங்களை அலசி ஆராய்ந்த போது சுப்பிரமணியம் வேதம் குற்றமற்றவர் என்பது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் 43 ஆண்டுகள் சிறை வாசத்திற்குப் பின் கடந்த அக்டோபர் 3ம் தேதி விடுதலையாக விருந்தார். ஆனால் 1980 களில் பிறப்பிக்கப்பட்ட நாடு கடத்தல் உத்தரவின் பேரில் அவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்துச் சுப்பிரமணியம் வேதத்தின் நாடு கடத்தல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர்  கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் சுப்பிரமணியம் வேதத்தை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளன.

Advertisement
Tags :
Advertisement