For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களுக்கு இந்திய தூதரகம் உதவி!

12:30 PM Mar 06, 2025 IST | Murugesan M
இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களுக்கு இந்திய தூதரகம் உதவி

போதைப் பொருள் கடத்தியதாக இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களுக்கு இந்திய தூதரகம் உதவி செய்ய முன்வந்துள்ளது.

கடந்த ஆண்டு மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்ற சரக்கு கப்பலில் 106 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்த முயன்றதாக ராஜி முத்துக்குமரன், கோவிந்தசாமி விமலக்கந்தன், செல்வதுரை தினகரன் ஆகிய தமிழர்கள் மரண தண்டனை பிரிவில் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

இது தொடர்பான வழக்கு இந்தோனேஷியா நாட்டின் கேரிமுன் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் 3 பேர் சார்பில் ஆஜரான கடல்சார் சட்ட நிபுணர் சாலமன் பொன்டோ மற்றும் இந்திய வழக்கறிஞர் எம்.ஜான்பால் ஆகியோர், கப்பலை இயக்கிய கேப்டனிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என வாதிட்டனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கப்பலின் கேப்டனை வரும் 11-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டனர்.

Advertisement

இந்நிலையில், 3 தமிழர்களுக்கும் சட்ட ரீதியாக உதவுவதற்காக அவர்களின் குடும்பத்தினரை இந்திய தூதரகம் தொடர்பு கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
Advertisement