For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்த தொழிலில் இவ்வளவு வருமானமா?: கல்லறைகளை சுத்தம் செய்தே சொந்த வீடு வாங்கிய UK இளைஞர்!

09:04 PM Jan 29, 2025 IST | Murugesan M
இந்த தொழிலில் இவ்வளவு வருமானமா   கல்லறைகளை சுத்தம் செய்தே சொந்த வீடு வாங்கிய uk இளைஞர்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் பல கல்லறைகளை சுத்தம் செய்ததன் மூலம் ஒரு புதிய வீடு வாங்கும் அளவிற்கு வருமானம் ஈட்டியுள்ளார். இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும்... நல்ல வருமானம் ஈட்ட வேண்டும்... குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும்... தங்களுக்கென்று மஒரு வீடு வாங்க வேண்டும். இவைகளே நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலரின் பெருங்கனவாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது... போட்டிகள் நிறைந்த தொழில் துறையில் இப்படிப்பட்ட கனவுகளை சுமந்து பயணிக்கும் இளைஞர்களின் மனதில், முதலில் எழும் கேள்வி நாம் என்ன தொழில் செய்து முன்னேறுவது என்பதுதான்.

Advertisement

அவர்களுக்கெல்லாம் தனது வித்தியாசமான தொழில் மூலம் இப்படியும் வருமானம் ஈட்டலாம் என சாதித்துக்காட்டி பாடம் கற்பித்திருக்கிறார் ஒரு இங்கிலாந்து இளைஞர். அந்நாட்டின் ஹார்லோ பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஷான் டூக்கி என்பவர் மற்றவர்கள் அசாதாரணமாக காணும் ஒரு தொழிலை செய்து, வெறும் ஒன்றரை ஆண்டுகளில் தனது குடும்பத்திற்கு ஒரு சொந்த வீடு வாங்கும் அளவுக்கு வருமானம் ஈட்டியிருக்கிறார். இறந்தவர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து புதுப்பித்து கொடுப்பதுதான் அவருக்கு குறைந்த காலத்தில் பெரும் வருமானத்தை ஈட்டிக்கொடுத்த அந்த தொழில்.

மரங்களை பராரிக்கும் பணியை முழு நேரமாக செய்து வரும் ஷான் டூக்கி, தனது பணி நேரம் போக மீதமுள்ள நேரத்திலும் மற்றும் வார விடுமுறை நாட்களில், அங்குள்ள கல்லறைகளை சுத்தம் செய்து புதுப்பிக்கும் பணிகளை செய்து வருகிறார். கல்லறைகளை சுத்தம் செய்து கொடுப்பது, பாழடைந்த கல்லறைகளை புதுப்பிப்பது, கல்லறைகளில் கற்கள் பதித்து அலங்காரம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளும் இவர், அதற்காக 187 டாலர்கள் முதல் 562 டாலர்கள் வரை ஊதியமாக பெறுகிரார். இந்த தொகை இந்திய ரூபாய் மதிப்பில் 15 ஆயிரத்து 535 ரூபாய் முதல் 46 ஆயிரத்து 673 ரூபாய் வரை என கணக்கிடப்பட்டுள்ளது.

Advertisement

ஒரு நாளைக்கு 2 முதல் 4 கல்லறைகள் வரை ஷான் டூக்கி சுத்தம் செய்வாராம். அத்துடன் தான் செய்யும் பணிகளை வீடியோ எடுத்து அதனை தனது முகநூல் மற்றும் டிக்-டாக் போன்ற சமூக வலைதளங்களிலும் அவர் பதிவேற்றி வருகிறார். அந்த பதிவுகளை காணும் பலர் தங்களது நெருக்கமானவர்களின் கல்லறைகளுக்கும், அதேபோல செய்ய வேண்டும் என எண்ணி அவரை அணுகுவதால் ஷான் டூக்கியின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒரு லாபகரமான தொழிலை செய்ய எண்ணி தொடங்கிய இந்த பணியை, தற்போது பெரும் அர்ப்பணிப்புடன் ஒரு சேவையாக கருதி செய்து வருவதாக ஷான் டூக்கி தெரிவித்துள்ளார். குறிப்பாக பலர் செய்ய தயங்கும் இந்த பணிகளை, மற்றவர்களுக்கு உதவும் ஒரு சேவையாக கருதி செய்வதால் அது தமது மனதுக்கு திருப்தி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

2023-ம் ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த தொழிலால், தனது வாழ்நாள் லட்சியமாக கருதிய சொந்த வீடு எனஅற இலக்கை, 2024-ம் ஆண்டு டிசம்பரில் அடைந்திருக்கிறார் ஷான் டூக்கி. இந்த தொழில், நிதி ரீதியாக தன்னையும், தனது குடும்பத்தாரையும் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்துள்ளதாக கூறும் ஷான் டூக்கி, பலரது அன்புக்குரியவர்களின் கல்லறைகளை புனரமைக்கும் பணியை தொடர்ந்து மன நிம்மதியுடன் மேற்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Advertisement