For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இனி கவலை வேண்டாம் : மிக குறைந்த செலவில் புற்றுநோய்க்குச் சிகிச்சை!

08:15 PM Mar 29, 2025 IST | Murugesan M
இனி கவலை வேண்டாம்   மிக குறைந்த செலவில் புற்றுநோய்க்குச் சிகிச்சை

வெளிநாடுகளில் சுமார் நான்கு கோடி ரூபாய் வரை செலவாகும் கேன்சர் சிகிச்சையை 25 லட்ச ரூபாய்க்கு முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே உருவாக்கி இந்திய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

கேன்சர்...ஒரு தடவ இந்த நோய் வந்துட்டா... மரணத்தை தவிர வேற வழியே இல்லனு இத்தனை ஆண்டுகளா நம்ம எல்லாருமே கான்சரை பார்த்து பயந்துட்டு இருந்தோம்... ஆனா , இனிமே நாம கேன்சர் நோய பார்த்து பயப்புட தேவையில்லை... வாழ்க்கையே முடிஞ்சு போச்சுனு தன்னம்பிக்கை இழந்திருக்க கேன்சர் நோயாளிகளுக்காக இந்திய மருத்துவர்கள் car t cell therapy-னு ஒரு புதியவகை சிகிச்சைய கண்டுபுடிச்சியிருக்காங்க.

Advertisement

car t cell therapy-ங்குறது புற்றுனோய சரிசெய்வதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒருவகையான நோய் எதிர்ப்பு சிகிச்சை முறை... நோயாளியோட நோய் எதிர்ப்பு செல்கள் அல்லது டி செல்கள் புற்றுநோய் செல்களை அழிக்கும் வகையில மாற்றி அமைக்கப்படுது...

இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்டதை அடுத்து ஐஐடி மும்பை மற்றும் டாடா மெமோரியல் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் முதல் உள்நாட்டு கார்-டி செல் சிகிச்சையான Nex CAR 19 மருத்துவ சோதனை முடிவுகளை வெளியிட்டுருக்காங்க...

Advertisement

இந்த car t cell therapy புற்றுநோய் சிகிச்சைகான மலிவு விலை சிகிச்சையா மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பால் 2013-இல் அங்கீகாரம் பெற்றிருக்கு... இந்த சிகிச்சையோட ஸ்பெஷல் என்னன்னா.

நோயாளியோட நோய் எதிர்ப்பு செல்கள் அல்லது டி செல்கள் புற்றுநோய் செல்களை அழிக்கும் வகையில மாற்றி அமைக்கப்படுகிறது.

1. இந்த சிகிச்சை மூலம் புற்றுநோய் நோயாளியின்  இரத்தத்திலிருந்து T செல்கள் எடுக்கப்படுகின்றன.

2. ஒரு ஆய்வகத்தில், T செல்கள் ஒரு சைமெரிக் ஆன்டிஜென் ஏற்பியை (CAR) வெளிப்படுத்த மரபணு ரீதியாக மாற்றியமைக்கப்படுகின்றன.

3. CAR T செல்கள் ஆய்வகத்தில் அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன.

4. CAR T செல்கள் ஒரு IV மூலம் நோயாளிக்குள் மீண்டும் செலுத்தப்படுகின்றன.

5. இப்படி செலுத்தும்போது மாற்றியமைக்கப்பட்ட கார் டி செல்கள் புற்றுநோய் ஆன்டிஜெனை வெளிப்படுத்தும் புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டுபிடிச்சு... பிறகு அதோட இணைந்து புற்றுநோய் செல்களை மொத்தமா அழிக்குது.

மருத்துவ பரிசோதனைகள்ள இந்திய நோயாளிகளிடையே இந்த ஊழி 73 சதவீதம் பலன் தருவது மருத்துவ ஆய்வு முடிவுல தெரியவந்துள்ளது. இது புற்றுநோய்க்கான இந்தியாவின் முதல் மரபணு சிகிச்சை. குறிப்பா வழக்கமான புற்றுநோய் சிகிச்சை மாதிரி இல்லாம கார் டி செல்கள் உடல்ல பல ஆண்டுகாலம் நீடித்து புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்க உதவுகின்றன.

Advertisement
Tags :
Advertisement