For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இஸ்ரேல் அறிவியல் களஞ்சியம் தீக்கிரை : விஞ்ஞானிகள் கொலைக்கு வஞ்சம் தீர்த்த ஈரான்!

08:55 PM Jun 23, 2025 IST | Murugesan M
இஸ்ரேல் அறிவியல் களஞ்சியம் தீக்கிரை   விஞ்ஞானிகள் கொலைக்கு வஞ்சம் தீர்த்த ஈரான்

இஸ்ரேல் ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் .இஸ்ரேலின் பங்குச்சந்தை வளாகம், முக்கியமான மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய ஈரான், அந்நாட்டின் அறிவியல் களஞ்சியமாக விளங்கும் Weizmann Institute of Science என்ற ஆராய்ச்சி நிறுவனம் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.  இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1934 ஆம் ஆண்டு, இஸ்ரேலின் முதல் அதிபரும், விஞ்ஞானியுமான Chaim Azriel Weizmann சாய்ம் அஸ்ரியல் வெய்ஸ்மேன் உருவாக்கிய வெய்ஸ்மென் அறிவியல் நிறுவனம், ஆராய்ச்சி அறிவியலின் மணிமகுடம் என்று போற்றப்படுகிறது. வேதியியலுக்கான நோபல் பரிசு உட்பட மூன்று ட்யூரிங் விருதுகளை (Turing Awards) இந்நிறுவன விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர்.

Advertisement

1954ம் ஆண்டில் இஸ்ரேலின் முதல் கணினியையும் இந்நிறுவனம் தான் உருவாக்கியது. தொடர்ந்து இன்றும், இந்நிறுவனம் உலகின் முன்னணி பல்துறை ஆராய்ச்சி நிறுவனமாக இயங்கி வருகிறது.

இஸ்ரேலின் ரெஹோவாத் பகுதியில் உள்ள இந்த நிறுவனம், நியூரோ வளர்ச்சி குறைபாடுகள், புற்று நோய் மற்றும் இதய நோய்கள் தொடர்பான ஆய்வுகளில் தொடர்ந்து முன்னணியிலிருந்து வருகிறது. இந்நிறுவனத்தில் இரண்டு பிரதான முக்கிய கட்டிடங்களில்,45 ஆய்வுக் கூடங்கள் உள்ளன. ஆயிரத்தும் மேற்பட்ட ஆய்வு மாதிரிகள் மற்றும் பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள்,அறிஞர்களால் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆய்வு ஆவணங்கள் இந்த ஆய்வுக் கூடங்களிலிருந்தன.

Advertisement

இராணுவ மற்றும் உளவுத்துறையில் ஆழமாகத் தொடர்புடைய இந்த நிறுவனம், நீண்ட காலமாகவே ரஃபேல், ஐஏஐ மற்றும் எல்பிட் சிஸ்டம்ஸ் போன்ற முக்கிய ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்நிறுவனத்தின் விஞ்ஞானிகள் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் மேம்பட்ட இராணுவ தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆய்வகம், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் எல்லாமே மண்ணோடு மண்ணாகி உள்ளது. ஒரு கண்ணாடி மாளிகையான வெய்ஸ்மென் நிறுவனம் 100 சதவீதம் சேதமடைந்துள்ளது. அந்தப் பகுதியே  ஒரு போர் மண்டலமாக  மாறியுள்ளது. அந்நிறுவனத்தின் 45 ஆய்வுக்கூடங்களும் உடைந்து நொறுங்கிக் கிடக்கிறது.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக உழைத்து, விலங்குகள் மற்றும் நோயாளிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான இதய திசுக்கள், டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ மாதிரிகள் மற்றும் ஆய்வுகளுக்கு உட்படுத்திய அறிவியல் மாதிரிகள் என எல்லாமே காணாமல் போய் விட்டன.  இஸ்ரேலின் அறிவியல் மரபுகளுக்கு மிகப் பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.

அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் பயன்படும்  அதிநவீன கருவிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.  இஸ்ரேல் இராணுவத்தின் பயங்கரவாத மூலக்கல்லை அகற்றியுள்ளதாக, இந்த தாக்குதல் குறித்து ஈரான் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆராய்ச்சி கட்டமைப்பு திட்டங்களில் வெய்ஸ்மேன் நிறுவனம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. 1996ம் ஆண்டில் இருந்து, கிட்டத்தட்ட 600 மில்லியன் யூரோ மதிப்பிலான நிதியைப் பெறுகிறது.

2021 ஆம் ஆண்டில் ஐரோப்பா மூலம் மொத்தம் 118 மானியங்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது.  ஐரோப்பிய ஒன்றிய ஆராய்ச்சி நிதியுதவி பெறும் விஞ்ஞானிகளின் ஆய்வு பணிகள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆராய்ச்சி கவுன்சில் கூடுதல் மானியம் வழங்கினால் மட்டுமே ஆய்வுகளைத் தொடரமுடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே,வெய்ஸ்மென் அறிவியல் நிறுவனத்தை நேரில் ஆய்வு செய்த அதன் தலைவரான (Professor Alon Chen) பேராசிரியர் அலோன் சென், சோகமும் சிரமமும் இருந்த போதிலும், புதிதாக வெய்ஸ்மென் நிறுவனத்தைக் கட்டி எழுப்புவோம் என்று கூறியுள்ளார்.

மனிதகுலத்தின் சிறந்த எதிர்காலத்துக்கான அதிநவீன ஆராய்ச்சிகளில் வெய்ஸ்மென் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு, மீண்டும் உலகை வழிநடத்துவோம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
Tags :
Advertisement