For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஈரோடு இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது!

07:01 AM Feb 05, 2025 IST | Sivasubramanian P
ஈரோடு இடைத்தேர்தல்   வாக்குப்பதிவு தொடங்கியது

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி  நடைபெற்று வருகிறது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்காலமானதை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக, பாஜக, தேமு​திக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.

Advertisement

திமுக வேட்​பாளர் சந்​திரகு​மார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீ​தாலட்​சுமி உள்ளிட்ட 46 பேர் இடைத்தேர்தலில் களம் காண்கின்றனர்.

1 லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

Advertisement

53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.  9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு மையங்கள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.

Advertisement
Tags :
Advertisement