For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

03:54 PM Jul 06, 2025 IST | Ramamoorthy S
உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே சாலையோரம், பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கார் விழுந்த விபத்தில் 5 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

கேரளாவைச் சேர்ந்த 5 பேர், காரில் உதகைக்கு சுற்றுலாவுக்குச் சென்றனர். உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் பள்ளத்தில் இருந்த வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement