உதவி மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் - 51 பேர் பலி!
02:51 PM Jun 04, 2025 IST | Murugesan M
காசாவில் செயல்பட்டு வரும் உதவி மையங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 51 பேர் பலியாகினர்.
காசாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை மையங்கள் கொலைக்களங்களாக மாறி வருகின்றன.
Advertisement
இந்த முகாம்களை நோக்கி வரும் மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 340 பேர் காயமடைந்துள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 54,418 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
காசாவில் எஞ்சியிருந்த ஒரே டயாலிசிஸ் மையமும் இஸ்ரேலிய குண்டுவீச்சில் அழிக்கப்பட்டுள்ளது.
Advertisement