உத்தரப்பிரதேசம் : தேனிலவு சென்றபோது கணவரை கூலிப்படையால் கொன்ற பெண் கைது!
04:12 PM Jun 09, 2025 IST | Murugesan M
மேகாலயாவில் தேனிலவு சென்றபோது கணவரைக் கூலிப்படை மூலம் கொன்றதாகப் பெண் கைது செய்யப்பட்டார்.
மத்தியப்பிரதேசம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதி, மேகாலயாவுக்கு தேனிலவுக்கு சென்ற நிலையில் கடந்த 23-ம் தேதி திடீரென மாயமாகினர்.
Advertisement
அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் ராஜா ரகுவன்ஷி நீர்வீழ்ச்சிக்கு அருகே சடலமாக மீட்கப்பட்டார். சுற்றுலா வழிகாட்டி அளித்த வாக்குமூலத்தின்படி, சோனம் தனது கணவரைக் கொன்றுவிட்டு மூவருடன் மாயமானது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் காஜிப்பூர் அருகே சோனம் கைது செய்யப்பட்டார்.
Advertisement
இதுதொடர்பாக மேலும் மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement