உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம் - இன்று திறந்த வைக்கிறார் பிரதமர் மோடி!
07:00 AM Jun 06, 2025 IST | Ramamoorthy S
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.
செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆயிரத்து 315 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான ரயில் போக்குவரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனை இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.அதனை தொடர்ந்து கம்பி வழி ரயில் பாலமான அஞ்சி பாலத்தையும், கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.
அத்துடன் சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement