உலக புகழ்பெற்ற பைசைக்கிள் தீவ்ஸ் பட நடிகர் என்சோ மறைவு!
12:42 PM Jun 07, 2025 IST | Murugesan M
பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகர் என்சோ காலமானார்.
1948-ம் ஆண்டு வெளியான பைசைக்கிள் தீவ்ஸ் திரைப்படத்தை விக்டோரியா டிசிகா இயக்கியிருந்தார். உலகப்போருக்கு பின்பான வேலையில்லா திண்டாட்டம் மக்களை எப்படியெல்லாம் சீரழித்தது என்பதை இப்படம் பேசியது.
Advertisement
இன்றும் உலகின் தலைசிறந்த 10 திரைப்படங்களின் பட்டியலில் பைசைக்கிள் தீவ்ஸ் இடம்பெற்றுள்ளது. இதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான என்சோ தொடர்ந்து படங்களில் நடித்தும் அவருக்கு வாழ்வில் திருப்புமுனை ஏற்படவில்லை.
இதனால் அவர் நடிப்பைக் கைவிட்டு கணித ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்நிலையில் இத்தாலியில் குடும்பத்துடன் வசித்து வந்த 85 வயதான என்சோ உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement