மதுரையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்கிய விடுதி அருகே பறந்த ட்ரோன் - போலீசார் விசாரணை!
09:18 AM Jun 08, 2025 IST | Ramamoorthy S
மதுரை சிந்தாமணி பகுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்கும் விடுதி அருகே தடையை மீறி ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்து தனியார் விடுதிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வருவதற்கு முன்பாக, அந்த பகுதியில் ட்ரோன் ஒன்று பறந்தது.
Advertisement
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அங்கு செல்வதற்கு முன்பாகவே ட்ரோன் தரையிறக்கப்பட்டது. வானில் பறந்த ட்ரோன் ஏதேனும் விஷேச நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் மூலம் பறக்க விடப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement