For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

08:35 PM Jul 07, 2025 IST | Murugesan M
உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா   இஸ்ரேலின் air lora சூப்பர்சோனிக் ஏவுகணை

இஸ்ரேலின் மிக அதிக சக்தி வாய்ந்த ஏர் லோரா வான்வழி சூப்பர் சோனிக் ஏவுகணைகளை  இந்திய விமானப்படை வாங்கவுள்ள நிலையில், அதை உள்நாட்டில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் லோராவின் சிறப்பம்சங்கள் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 11 ஆண்டுகளாகவே,இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புக்களை நவீனப் படுத்தி வருகிறது. சுயச் சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், பல்வேறு அதிநவீன ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புக்களை இந்தியா முழுவதும் உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.

Advertisement

மேலும், ரஷ்யா,அமெரிக்கா,பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஆயுத தளவாடங்களை இறக்குமதி செய்து வருகிறது. குறிப்பாக, இஸ்ரேலின் மொத்த ஆயுத ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 41 சதவீதம் ஆகும். இஸ்ரேல் ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்குகிறது.

இந்தச் சூழலில், சீனா மற்றும் பாகிஸ்தானின் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முயற்சியில் இந்தியா, இஸ்ரேலின் அதிநவீன சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது. 2023ம் ஆண்டில், மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் Israel Aerospace Industries ஆகிய நிறுவனங்கள்,  ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

Advertisement

இந்த ஒப்பந்தத்தின் கீழ் , இந்தியாவின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL), இந்திய முப்படைகளுக்கும் ஏற்றவாறு, AIR LORA  வை உள்ளூரில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் ஆயுதப் படைகளை அதிநவீன குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுக்குப் பலமாக அமையும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப பரிமாற்றத்தை உறுதி செய்யும் இஸ்ரேலுடனான இந்த ஒப்பந்தம், பாதுகாப்புத்  துறையில் இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான அடித்தளம் என்று Indian Defence Research Wing கூறியுள்ளது.

ஏற்கெனவே இஸ்ரேல் வான்வழி பாலிஸ்டிக் ஏவுகணையான IMI Rampage என்று ஏவுகணைகளை இந்தியா வாங்கியுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தானின் விமானத் தளங்களை  Rampage  ரேம்பேஜ் ஏவுகணையைப் பயன்படுத்தி இந்திய விமானப்படை தாக்கி சாதனை படைத்தது.

250 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும்  Rampage ரேம்பேஜ் ஏவுகணையை விடவும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை இந்திய விமானப்படை வாங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, 400 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் இஸ்ரேலின் AIR LORA  சூப்பர் சோனிக் ஏவுகணைகளை வாங்க இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

AIR LORA  நீண்ட தூரப் பீரங்கி மூலம் வான்வழியாக ஏவப்படும் ரக ஏவுகணையாகும்.  ஒரு நீண்ட தூர வான்-தரை ஏவுகணை (AGM)  ஆகும். இந்த Stand Off  Air-to-Surface ஏவுகணையை Israel Aerospace Industries  நிறுவனம் தயாரித்துள்ளது.

AIR LORA  ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை (SRBM) ஆகும். முதன்மையாக மொபைல் லாஞ்சர்களிலிருந்து தரையில் ஏவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, கடலில் இருந்தும்  ஏவப்படும் வகையில் மேம்படுத்தப் பட்டுள்ளது. 1,600 கிலோ ஏவுதல் எடையுடன், ஏவுகணையை இந்தியாவின் Su-30MKI விமானங்களிலிருந்தும்  செலுத்த முடியும் என்று கூறப்படுகிறது. மேலும்  F-16,  P-8 என அனைத்து போர் விமானங்களிலும் இந்த ஏவுகணையைப் பொறுத்த முடியும்.

கட்டளை மையங்கள், விமானப்படைத் தளங்கள், உள்கட்டமைப்பு மற்றும் அடர்த்தியான கடற்கரை சூழல்களில் கடற்படைக் கப்பல்கள் போன்ற உயர் மதிப்புள்ள மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட இலக்குகளுக்கு எதிராகத் துல்லியமான தாக்குதல் நடத்த உருவாக்கப் பட்ட ஏவுகணையாகும்.

சூப்பர்சோனிக் வேகத்தில் பயணிக்கும் AIR LORA , ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே இலக்குகளைத் தாக்கும் ஆற்றல் கொண்டதாகும். 10 மீட்டருக்கும் குறைவான Circular error probable (CEP) கொண்டுள்ளதால், இந்த ஏவுகணையால், குறைந்தபட்ச இணை சேதத்துடன் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது.

பல்வேறு வகையான வலுவான போர்முனைகளைக் கொண்ட AIR LORA, எதிரிகளின் வான் பாதுகாப்புக்கு எட்டாத தூரத்திலிருந்து, எதிரியின்  இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாகும். GPS சிக்னல்கள் மறுக்கப்படும் சூழல்களில் கூட துல்லியமாக இலக்கைத் தாக்கும் திறன் உடையதாகும்.  90 டிகிரி தாக்குதல் கோணம் என்பதால் இந்த ஏவுகணையின் வெற்றி விகிதம் 100 சதவீதமாக உள்ளது.

இரவும், பகலும் மற்றும் அனைத்து வானிலையிலும் செயல்படும் இந்த ஏவுகணை, fire-and-forget missile system ஆகும். AIR LORA என்பது ஏவப்பட்ட பிறகு, மற்ற வழிகாட்டுதல்கள் தேவையில்லை. மேலும்  AIR LORA அதன் இலக்கு ஒருங்கிணைப்புகளை விமானத்தின் நடுவில் மாற்ற முடியும். இது போர்க்கள சூழ்நிலைகளில் அதிரடி மாற்றங்களை உருவாக்க உதவுகிறது.

வெடிமருந்துகள்,வெடிகுண்டுகள்,அணுஆயுதம் என பல்வேறு நோக்கங்களுக்கான பல்வேறு வகையான போர்முனைகளுடன் இந்த ஏவுகணையைப் பொறுத்த முடியும் என்பது AIR LORA வின் சிறப்பம்சமாகும். எல்லைகளில் அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், நாட்டின் பாதுகாப்புக்காக இந்திய விமானப்படை மேலும், மேலும் வல்லமை மிக்கதாக வளர்ந்து வருகிறது.

Advertisement
Tags :
Advertisement