ஊக்க மருந்து பயன்படுத்திய அர்ச்சனா ஜாதவ்-க்கு 4 ஆண்டுகள் தடை!
06:17 PM Mar 19, 2025 IST | Murugesan M
ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் இந்திய ஓட்டப்பந்து வீராங்கனை அர்ச்சனா ஜாதவ்-க்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் புனேயில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் அர்ச்சனா ஜாதவ் பங்கேற்றார். இந்த போட்டியின் போது அர்ச்சனா ஜாதவ் இடம் ஊக்க மருந்து தடுப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், "ஆக்சன்ட்ரோலோன்" என்ற ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியது தெரியவந்தது.
Advertisement
இதற்கு அர்ச்சனா ஜாதவ் முறையான விளக்கம் அளிக்காததை அடுத்து 4 ஆண்டுகளுக்குத் தடகள போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement