எதிர்க்கட்சியினர் ரகசிய தகவல்களை கசியவிட்டனர் - ட்ரம்ப் குற்றச்சாட்டு!
05:00 PM Jun 27, 2025 IST | Murugesan M
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ரகசிய தகவல்களை ஜனநாயகக் கட்சியினர் கசியவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் அழைப்பு விடுத்தார்.
Advertisement
அத்துடன் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணு உலைகள் அழிக்கப்படவில்லை எனத் தெரிவித்த பத்திரிகையாளர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இருப்பினும் எதிர்க்கட்சியினரே ரகசிய தகவல்களை கசியவிட்டதற்கான ஆதாரத்தை டிரம்ப் வெளியிடவில்லை.
Advertisement
Advertisement