"எது சரியோ அதனை பிரதமர் மோடி செய்வார்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி!
பிரதமர் மோடி பிப்ரவரியில் அமெரிக்கா வர திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் டிரம்ப்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி உரையாடினார்.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிரதமர் மோடியுட்ன் நீண்ட நேரம் பேசியதாகவும், அவர் பிப்ரவரியில் அமெரிக்கா வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு உள்ளதாகவும் அவர் கூறினார். .
குடியேற்றப் பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமருடன் விவாதித்ததாகவும், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு வந்த இந்திய குடியேறிகளை திரும்பப் பெறுவதில் பிரதமர் மோடி "சரியானதை செய்வார்" என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கத் தயாரிப்பு பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதை இந்தியா அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும், நியாயமான இருதரப்பு வர்த்தக உறவை நோக்கி நகர்வதன் முக்கியத்துவத்தையும் ட்ரம்ப் வலியுறுத்தினார். அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும். இருதரப்பு வர்த்தகம் 2023-24 ஆம் ஆண்டில் 118 பில்லியன் டாலர்களைத் தாண்டியது என ட்ரம்ப் கூறினார்.